×

தாமரை கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் செக் வைக்க நினைக்கும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சி ஆடும் வரை ஆடட்டும்… பார்லி தேர்தலில் நம்ம வேலையை காட்டிட வேண்டியதுதான் என்று சொன்னதாக புல்லட்சாமியின் ஆதரவாளர்கள் ேபசிக்கிறாங்களே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் காஸ் சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என புல்லட்சாமி மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், சிலிண்டருக்கு ரூ.300 மானியத்துக்கு நிதி ஒதுக்குவது தாமரை கட்சி, அதை புல்லட்சாமியும், அவரது கட்சியும் தனியாக அரசியல் ஆதாயம் தேடுகிறது. இந்த திட்டத்தை தாமரை கட்சியின் விவிஐபிதான் அறிவித்தார். இந்த ரூ.300 மக்கள் பலன் பெறும் திட்டத்துக்கான கிரிடிட் தாமரை கட்சிக்குதான் கிடைக்க வேண்டும். அது எப்படி புல்லட்சாமி கட்சி அதன் பலன் போகலாம் என்று தாமரை கட்சியினர் கொடி பிடித்துள்ளார்களாம். இந்த திட்டத்தால் புல்லட்சாமிக்கு அரசியல் ரீதியாக நல்ல பெயர் கிடைக்க கூடாது. தாமரை கட்சிக்கு கிடைக்க வேண்டும் என அக்கட்சி தலைமை தூண்டுதலின் தாமரை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானதாம் இந்த விஷயம் லீக் ஆனதும், புல்லட்சாமி கட்சியினர் தாமரை மீது டென்ஷனில் இருக்காங்களாம். இந்தநிலையில் புல்லட்சாமி கட்சி சார்பில் சமையல் எரிவாயு மானியம் திட்டம், பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானதாம். உடனே புதுவை தாமரை கட்சியினர், கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. எனவே கூட்டணி அரசு சார்பில் தாமரை பிளஸ் புல்லட்சாமி கட்சியினர் இணைந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என புல்லட்சாமியிடம் சொன்னாங்களாம். வேறு வழியில்லாமல் புல்லட்சாமி சரியினு சொல்லிட்டாராம். இதை தொடர்ந்து நகர் முழுவதும் பேனர், போஸ்டர் என தாமரை கட்சியினர் புதுச்சேரியில் தாமரை ஆட்சிதான் நடக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அமர்களப்படுத்திட்டாங்களாம்.. இதனால் புல்லட்சாமி கட்சி தொண்டர்கள் புலம்ப, தலைவரோ கவலைப்படாதீங்க… நாடாளுமன்ற தேர்தலில் நம்ம பவரை காட்டலாம். அவங்க ஜெயிப்பாங்களா என்பதை தேர்தல் ரிசல்ட் சொல்லும், பிறகு கூட்டணிக்கு நம்மை நோக்கி வருவாங்க… அப்போது பார்த்து கொள்ளலாம். உள்ளூர் அரசியலில் நீங்க ஸ்டிராங்கா இருங்க என்று புல்லட்சாமி அறிவுரை வழங்கியதாக பேச்சு புதுச்சேரியில் ஓடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரத்த கொதிப்பு வாட்ச் கட்டி உள்ள தலைவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழக தாமரைக்கட்சி ‘மவுன்டன்’ மாநிலத்தலைவர் கடந்த மாதம் 28ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் பாத யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறார். கட்சியில் விரல் விட்டு சொல்லும் அளவுக்கு உள்ள நிர்வாகிகள் தான் தாமரை கட்சி தலைவருக்கு ஆரவார வரவேற்பு கொடுக்கிறாங்களாம். ஆனால் பொதுமக்கள், வியாரிபாரிகள் உள்பட யாரும் கண்டு கொள்வதில்லையாம். இதில் அடிக்கடி அப்செட் ஆகும், ‘மவுன்டன்’ உடனே, தன் பக்கத்தில் வரும் நிர்வாகியிடம் ‘இந்த பீல்டு சரியில்லையே… வேறு ஏரியாவுக்கு நடைபயணம் மாத்திகலாம்னு உடனே ஜாகையை மாற்றிவிடுகிறாராம். ஒரு கட்டத்தில் ‘மவுன்டன்’ தலைவர் தானாகவே சென்று வியாபாரிகள், பொதுமக்களுக்கு வணக்கம் வைக்கிறாராம். அப்போது இடது கையில் ராக்கெட் வாட்ச்சை பார்ப்போர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம். தற்போது வலது கையிலும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் கட்டி இருக்கிறாராம். அதை பார்த்த மிஸ்டர் பொதுஜனங்கள் உளவு பார்க்கவா, நடந்த தூரத்தை அளவிடவா அல்லது தன் உடல் நலத்தை பார்க்க வாட்ச் கட்டி உள்ளாரா என யோசிக்க தொடங்கிட்டாங்களாம். அதை கேட்ட பொதுஜனங்களில் ஒருவர், அது ரத்த கொதிப்பு உள்ளதா என்பதை காட்டும் வாட்ச்… அப்போது தன் உடல் நலத்தை பாதுகாக்கவே நடைபயணத்தை தொடங்கி சுகர், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களை கன்ட்ரோலுக்கு கொண்டு வரவே இந்த நடைபயணம் என்று பேசிக் கொள்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புது வீட்டுக்கு சேன்டல் உட் வெட்டி யார் கடத்தினா…’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுல தொடங்கி பாடியில முடியும் தாலுகா இருக்குது. இந்த தாலுகாவுல சே என்ற எழுத்துல தொடங்குற ஊர் இருக்குது. இந்த ஊர்ல, தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் போர்ஸ் பட்டாலியன் இருக்குது. இந்த வளாகத்துல சேன்டல் உட் உட்பட விலை மதிப்புள்ள பல மரங்கள் வளர்த்து வர்றாங்க. கடந்த வாரம், இந்த பட்டாலியன்ல இருக்குற 3 ஸ்டார் அதிகாரி, தன்னோட புதுவீட்டுக்கு சேன்டல் மரத்தை அடியோடு வெட்டி வாகனத்துல எடுத்துகிட்டு போய்ட்டாராம். உயர் அதிகாரின்றதால, அவருக்கு அங்க இருக்குற 3 பேரு உதவியிருக்காங்க. கமாண்டர் வெளியூருக்கு போயிருக்குற நேரமா பார்த்து செஞ்சிட்டு, மூடி மறைச்சிடலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா, யாரோ இதை செல்போன்ல வீடியோவாக எடுத்து கமாண்டருக்கு அனுப்பிச்சிட்டாங்களாம். இந்த விவகாரம் சென்னை வரைக்கும் போயிருக்குது. இதுல, 3 ஸ்டாருக்கு உதவிய 3 பேரையும் பிடிச்சி விசாரணை நடத்தினாங்களாம். அப்புறம் அவங்களை வேற பட்டாலியனுக்கு தூக்கியடிச்சாங்களாம். கமாண்டர் வந்த பிறகுதான் 3 ஸ்டார் காக்கி மேல நடவடிக்கை பாயுமாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் செக் வைக்க நினைக்கும் புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Bullatsamy ,wiki Yananda ,Bullutzamy ,Barley ,Lotus Party ,Bullutsamy ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...