×

செங்கல்பட்டு அருகே தனியார் ஊழியர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: தனியார் ஊழியர் வீட்டில், மர்ம நபர்கள் 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு அடுத்த புளிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுளிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவரது, மனைவி ரமாதேவி (19). சரவணன் செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்ற இவர் நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், வீட்டின் பின் பக்க கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தகவலின்பேரில், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழ், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, நகையை திருடி சென்ற மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே தனியார் ஊழியர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Chengalpattu ,Pulipakkam Panchayat ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை