×

உதவி கோட்ட பொறியாளராக தற்காலிகமாக 91 பேருக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் 91 உதவிப் பொறியாளர்களுக்கு, 2022-23ம் ஆண்டிற்கான காலிப்பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் நிபந்தனைகளுடன் உதவிக் கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சட்ட பிரிவின் படி 91 உதவிப்பொறிளார்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான காலிப்பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் நிபந்தனைகளுடன் உதவிக்கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள் பதவியில், பதவி உயர்வு பெறத் தகுதியுடைவர்கள் ஆவர். இப்பதவி உயர்வு பெற்ற காரணத்தினால் மட்டுமே, வருங்காலங்களில் உயர்பதவி பெற எந்தவொரு முன்னுரிமை கோர தகுதிபெற மாட்டார்கள்.

எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல் மற்றும் எந்தக் காரணமும் இல்லாமல் நியமன அதிகாரியால் இந்த பதவி உயர்வு விலக்கிக் கொள்ளப்படும். அதன்படி உதவிப்பொறியாளர்களாக இருந்த நெடுஞ்செழியன், அகிலா, குமரேசன், முருகபெருமாள், ரமேஷ்கண்ணா, பழனிசாமி, பூபாலன், போத்திலிங்கம், சுரேஷ், விநாயகம், அருண்குமார், விஜயசந்திரன், வெங்கடேசன், பிரபு, சதாசிவம், அண்ணதுரை, பாலசெந்தில்நாதன், எபிநேசர் அன்புராஜ், உதயகுமார், பர்வீன், அசோக்குமார், ஞானபிரகாசம், சுகுணா, மருதாச்சலம், ஆண்டனிதாஸ், யசோதா, கண்ணன், கார்த்திகேயன், தீபக், அருண்பிரசாத், ஜெயவாணி, பிரேமாராணி உட்பட 91 உதவிப்பொறியாளர் பதவியிலிருந்து உதவிக் கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

The post உதவி கோட்ட பொறியாளராக தற்காலிகமாக 91 பேருக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Highways Department ,Chennai ,Department ,Dinakaran ,
× RELATED கோடை காலங்களில் மனிதர்களை போல...