×

ஒன்றிய அரசு நிறுவனத்தில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி: 26, 27ம் தேதிகளில் நடக்கிறது

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், பயோ சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். வேலைக்கு செல்பவர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிக் கட்டணம் ரூ.4 ஆயிரம். ஆகஸ்ட் 26 மற்றும் 27ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி முடிவில் ஒன்றிய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களுக்கு 97909 20166, 82483 09134 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

The post ஒன்றிய அரசு நிறுவனத்தில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி: 26, 27ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Union Government Institute ,Chennai ,MSME Technology Development Center of the Union Government ,Guindy ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!