×

பராமரிப்பு பணி காரணமாக கிண்டி கோட்ட பகுதிகளில் 9 நாட்களுக்கு மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக கிண்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை முதல் 10ம் தேதி வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனால், கீழ்காணும் இடங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் நிறுத்தப்படும், என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மடிப்பாக்கம்: ராம்நகர் (வடக்கு மற்றும் தெற்கு), குபேரன் நகர் விரிவாக்கம், சதாசிவம் நகர், அன்னை தெரசா நகர், சிவபிரகாசம் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (வடக்கு) லட்சுமி நகர்.
நங்கநல்லூர்: நேரு காலனி 1 முதல் 22வது தெரு, பி.வி நகர் 1 முதல் 19வது தெரு, உள்ளகரம், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, வேம்புலி கோயில் தெரு. மூவரசன்பட்டு: ஐயப்பா நகர் மெயின் ரோடு, கார்த்திகேயபுரம் முழுவதும், அண்ணா நகர், சுப்ரமணியன் நகர், அருள் முருகன் நகர்.
புழுதிவாக்கம்: திலகர் அவென்யூ, ஓட்டேரி சாலை, முருகப்பா நகர், சாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, உள்ளகரம், திரவுபதி அம்மன் கோயில் தெரு, ராஜரத்தினம் தெரு. ராஜேஸ்வரி நகர், புழுதிவாக்கம் நகராட்சி அலுவலகம்.
தில்லை கங்கா நகர்: நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.ஜி நகர் 1வது மற்றம் 25வது தெரு, நங்கநல்லூர் 12 முதல் 18வது தெரு வரை, பழவாந்தாங்கல், டி.என்.ஜி.ஓ காலனி. ஜீவன் நகர், ராம் நகர் 3வது மெயின் ரோடு, இந்திரா நகர், பி.எம் மருத்துவமனை.
ஆதம்பாக்கம்: பார்த்தசாரதி நகர், நியூ காலனி, வி.வி காலனி, என்.ஜி.ஓ காலனி, செயலக காலனி, மின்வாரிய காலனி, திருவள்ளுவர் தெரு, ஆபிசர் காலனி, கக்கன் நகர், அம்பேத்கர் நகர்.
வாணுவம்பேட்டை: சரஸ்வதி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், திருவள்ளுவர் தெரு. ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர், நேதாஜி காலனி.

The post பராமரிப்பு பணி காரணமாக கிண்டி கோட்ட பகுதிகளில் 9 நாட்களுக்கு மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Guindi district ,CHENNAI ,North East ,Guindi Zone ,Dinakaran ,
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் காங்....