×

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், ஜெயராம் புரம், கம்மார்பாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை-கம்மார் பாளையம் சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட இச்சாலையில் கம்பெனிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் நாலூர் அண்ணா நகர், ஜெயராம்புரம், பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நாளூர் ஏரிக்கரை கம்மார்பாளையம் சாலை அண்ணா நகரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ், மீஞ்சூர் ஒன்றிய திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம நிர்வாகிகள் பாபு, வக்கீல் சரவணன், சிவா, சுப்பிரமணி, சுரேஷ் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

The post சாலையை சீரமைக்கக்கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Anna Nagar, Jayarampuram ,Kammarpalayam ,Meenjur ,Nalur panchayat ,Dinakaran ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...