×

வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் அனுமதி பெற காவல்துறை அறிவுறுத்தல்

நாமக்கல்: வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் அனுமதி பெற காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொல்லிமலை வல்வில் ஓரிவிழா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வரும் வெளி மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சென்றவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளி மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை புதன் சந்தை – நைனாமலை- துத்திக்குளம்- காரவள்ளி சோதனைச் சாவடிகள் வழியாக மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். இதேபோல் மாலை அணிவித்து திரும்பும் போது செம்மேடு- செங்கரை- முள்ளுக்குறிச்சி- அணைப்பாளையம் புறவழிச்சாலை- சேந்தமங்கலம் பிரிவு ரோடு சோதனைச் சாவடிகள் வழியாக கீழே இறங்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அறிவித்துள்ளார்.

The post வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் அனுமதி பெற காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Valvil ,NAMACKAL ,Valvil Ori ,Kolimalai Valvil ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி