×

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் ஆடிப்பெருந் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தாடிக்கொம்பின் தேரோடும் வீதியில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி, சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் சமேதமாக எழுந்தருளி அருள்பாலித்தார். இதன்பின்னர் இரவு பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக உலா வந்து அருள் பாலித்தார்.

இன்று மாலை குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி உலா வருகிறார். ஆடிபெருந்தி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஆக.1) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை சௌந்தரராஜ பெருமாள் திருத்தேருக்கு புறப்பாடும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேராட்டமும் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Adi Thirukalyanam ,Badikkombo Sundararaja Perumal Temple ,Dindikkal ,Dindigul ,Audiperun ,Beadhikombo Sundararaja Perumal ,Temple ,Adi Thirukkalyanam ,Beard Soundararaja Perumal Temple ,
× RELATED ‘திண்டுக்கல்’லை நசுக்க பார்க்கும்...