×

நாளை கடைசி ஒரு நாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?.. 2வது போட்டியில் வென்றதால் வெஸ்ட் இண்டீஸ் உற்சாகம்!

டிரினிடாட்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இந்திய முன்னணி வீரர்கள் ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 2வது ஒரு நாள் போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்குகிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா மீண்டு வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

The post நாளை கடைசி ஒரு நாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?.. 2வது போட்டியில் வென்றதால் வெஸ்ட் இண்டீஸ் உற்சாகம்! appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Trinidad ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...