×

விவசாயிகள், நெசவாளர்களை சந்திக்காமல் சென்றார்: பரமக்குடியில் ஸ்டார் ஓட்டல் இல்லாததால் அண்ணாமலை தங்க மறுப்பு

சென்னை: அண்ணாமலை நடை பயணம் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து விமர்சனங்கள் புதிது புதிதாக புறப்பட்டு வருகின்றன. நேற்று இரவு ஓட்டலில் வசதி இல்லை என்று கூறி பல்வேறு பிரிவினரையும் சந்திக்காமல் வௌியூர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்தார். ஆனால் அவர் மாநிலம் முழுவதும் நடை பயணம் செல்லாமல், நகருக்குள் மட்டும் நடை பயணம் செய்கிறார். புறநகர் சென்றவுடன் பஸ்சில் பயணம் செய்கிறார். இதனால் அவர் நடை பயணம் இல்லை, பாதி பயணம் என்று பாஜகவினரே கிண்டல் அடித்து வருகின்றனர். அதோடு, நடை பயணத்தை தொடங்கி வைக்க அமித்ஷா 28ம் தேதி வந்தார். அந்த பொதுக் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. வந்திருந்தவர்களும் அமித்ஷா வந்தவுடன் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

அதோடு அவரது நடை பயண தொடக்க விழாவோடு மூத்த தலைவர்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர். அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் மட்டுமே பயணம் செய்கிறார். நேற்று நடை பயணத்தின்பாது பஸ்சை மறித்து, பொதுமக்களை இறக்கிவிட்டதாக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் அமர்பிரசாத் மீது மக்கள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் நேற்று இரவு நடை பயணத்தை முடித்து விட்டு பரமக்குடியில் தங்குவதாகவும் அப்போது சௌராஷ்டிரா சங்கமம் குழு, நெசவாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரையும் சந்திக்க வைப்பதாக உள்ளூர் பாஜகவினர் பலரையும் தயார் செய்து ஒரு ஓட்டலில் வைத்திருந்தனர். ஆனால் பரமக்குடி வந்த அண்ணாமலை அங்கு ஓட்டல் சரியில்லை என்ற கூறி தங்குவதற்காக ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனால், விவசாயிகள், நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளூர் பாஜக பிரமுகர்களுடன் சண்டை போட்டனர். நாங்களாகவா வந்தோம். நீங்கள்தானே அழைத்து வந்தீர்கள். இப்போது ஓட்டல் சரியில்லை என்பதற்காக எங்களை சந்திக்காமல் சென்றால் எப்படி என்று பிடி பிடியென பிடித்து விட்டனர். இதனால் உள்ளூர் நிர்வாகிகள் அங்கிருந்து நைசாக ஓடிவிட்டனர். இதனால் பல்வேறு தரப்பினரும் புலம்பியபடி சென்றனர்.

The post விவசாயிகள், நெசவாளர்களை சந்திக்காமல் சென்றார்: பரமக்குடியில் ஸ்டார் ஓட்டல் இல்லாததால் அண்ணாமலை தங்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Paramakkudy ,CHENNAI ,Paramakudi ,Dinakaran ,
× RELATED பரமக்குடி நகர்மன்றத்துக்கு நிரந்தர...