![]()
மும்பை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வேறொரு நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் பலகட்டமாக நடைபெற உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.
இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் தேர்தலுக்கு முன்பே நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. பொதுவாக 58 நாட்கள் ஐபிஎல் தொடர் நடைபெறும் ஆனால் டி-20 உலக கோப்பை தொடருக்கு முன்பு வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. எனவே மே 19ம் தேதி தொடர் முடிவடைய வேண்டும்.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று இறுதி போட்டி நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும் என தெரிகிறது. மேலும் தேர்தல் பணிகள் காரணமாக வெளிநாட்டில் தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு தேர்தலின் போது போட்டி தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. 2014ம் ஆண்டு பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வேறொரு நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்..!! appeared first on Dinakaran.
