×

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு

பாளையங்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் வரும் 20-ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து ஆட்சியை பிடித்த கட்சி திராவிட கட்சிகள் தான் என்றார். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் பல கூட்டணிகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.

பாளையங்கோட்டை ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி கூறியதாவது; நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி. பல கட்சிகள் நம்முடன் கூட்டு சேரலாம். எந்த கட்சிகள் கூட்டு சேர்த்தாலும் கூட களத்தில் நின்று போராடுகின்றவன், கிராமத்தில் நின்று போராடுகின்றவன் அதிமுக தொண்டர்கள் தான். ஆனால், கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் யாரும் வருவதில்லை. இவ்வாறு கூறினார். இதற்கு கூட்டணியில் இருக்கும் பாஜகவை கே.பி.முனுசாமி மறைமுகமாக சாடினாரா என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Deputy General Secretary ,KP Munusamy ,Balayangottai ,KP Munuswamy ,Madurai ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...