
- கிருஷ்ணகிரி
- மத்திய அமைச்சர்
- மோசடி மோசடி
- தில்லி
- ஹர்திப்சிங் பூரி
- மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி
- தின மலர்
டெல்லி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல என ஒன்றிய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில், பட்டாசு விற்பனை கடையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்தில் இறந்தவர்களின் 9 குடும்பத்திருக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கான காசோலைகள், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த காரணங்களை ஆய்வு செய்த தர்மபுரி தடயவியல் நிபுணர்கள், காஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வழங்கினர். இந்நிலையில் கிருஷ்ணகிரி தீ விபத்து குறித்து ஒன்றிய அமைச்சரவையில் பேசிய ஹர்திப்சிங் பூரி சிலிண்டர் தானாக வெடிக்காது என்றும் குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தார்.
சிலிண்டர் வெடி விபத்து நடந்த ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகமே செய்யப்படவில்லை என்று அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதி அமைந்துள்ள இடத்தில் பட்டாசு கடை இருந்ததே 9 பேர் உயிரிழப்புக்கு காரணம் அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி பதிலளித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் பட்டாசு குடோன் செயல்பட்டது எப்படி என்பதை கண்டறிய விசாரணை நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
The post கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்துக்கு சிலிண்டர் விபத்துகாரணமல்ல: ஒன்றிய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி appeared first on Dinakaran.