
பணி: Health Inspector Grade II. மொத்த இடங்கள்: 1066 (பொது330, பிற்பட்டோர் 282, முஸ்லிம் 37, மிகவும் பிற்பட்டோர் 213, எஸ்சி160, அருந்ததியர்33, எஸ்டி11)
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 18 லிருந்து 32க்குள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ 19,500 62,000.
தகுதி: அறிவியல் அல்லது கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Multi Purpose Health Worker/Sanitary Inspector/Health Inspector பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 2 வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
10ம் வகுப்பு, பிளஸ் 2, ஹெல்த் இன்ஸ்பெக்டர் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ 600/. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/அருந்ததியினருக்கு ₹300/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2023
The post தமிழக சுகாதாரத் துறையில் 1066 ஹெல்த் இன்ஸ்பெக்டர் appeared first on Dinakaran.