×

தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை..!!

சென்னை: தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இந்நிலையில் விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு அதிகாரிகளுடன், அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்துகிறார். தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

The post தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakarappan ,Chennai ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்