×

மும்பை ஐஐடி வளாகத்தில் சைவம் உண்பவர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை: அம்பேத்கர் பெரியார் புலே மாணவர்கள் அமைப்பு கடும் கண்டனம்

மும்பை: மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள கேன்டீனில் சைவம் உண்பவர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதிகளில் அமைந்துள்ள கேன்டீனில் இருந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உண்ணும் உணவு மூலம் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த போஸ்டர் இணையதளங்களில் வேகமாக பரவியது.

இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அம்பேத்கர் பெரியார் புலே அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்து எறிந்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறிய நிலையில் போஸ்டர் ஒட்டியது யார் என்று தங்களுக்கு தெரியாது என மும்பை ஐஐடியை சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தங்கள் கல்வி நிறுவனத்தில் உணவு விஷயத்தில் பாகுபாடு பார்க்கபடுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் கேள்வி எழுப்பியபோது ஐஐடியில் இத்தகு போன்ற கொள்கை இல்லை என்று நிர்வாகம் பதிலளித்துள்ளது.

The post மும்பை ஐஐடி வளாகத்தில் சைவம் உண்பவர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை: அம்பேத்கர் பெரியார் புலே மாணவர்கள் அமைப்பு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : IIT ,Mumbai ,Ambedkar Periyar Phule Students' Organization ,IIT Mumbai ,Ambedkar Periyar Phule students ,
× RELATED புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க...