×

விவசாயிகள் பயிரிடும் போதே என்எல்சி நிர்வாகம் தடுத்திருக்கலாம்

 

சிதம்பரம், ஜூலை 31: சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவியில் விவசாயிகள், பயிரிடும் போதே என்எல்சி நிர்வாகம் தடுத்து இருக்கலாம் என புதுவை கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், காரைக்காலில் நிர்வாக ரீதியாக ஆட்சியருடன் ஆலோசனை நடத்த செல்கிறேன். காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும், காரைக்காலில் குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு நடத்திவிட்டு பின்னர் திருவாரூர் செல்கிறேன்.

செல்லும் வழியில் நடராஜரை தரிசனம் செய்ய வந்தேன். தமிழை வளர்த்ததே ஆன்மீகம் தான். ஆண்டாள் வளர்க்காத தமிழா? நாயன்மார்கள் வளர்க்காத தமிழா?. தமிழகத்தில் ஒரே ஒரு பிரச்னை என்றால் ஏதோ ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போலவும், தமிழை வளர்த்தவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்பது போலவும் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் பயிரை அழித்ததில் எனக்கு ஒப்புதல் கிடையாது. பயிர் உயிருக்கு சமம். நிர்வாக ரீதியாக 10 ஆண்டுகளாக இடைவெளியை ஏன் அனுமதித்தார்கள்.

அதற்கு அனுமதிக்கப்பட்டு பயிர்கள் வளர்க்கப்பட்டு அறுவடை முடியும் வரை நிர்வாகம் காத்திருக்கலாம். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அதுதான். நிர்வாக ரீதியாக அரசாங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏன் இந்த இடைவெளி இருந்தது. பயிர் வளர்ந்த பிறகு அழிப்பதை விட, பயிரிடும் போதே தடுத்திருக்கலாம், என்றார்.

The post விவசாயிகள் பயிரிடும் போதே என்எல்சி நிர்வாகம் தடுத்திருக்கலாம் appeared first on Dinakaran.

Tags : NLC administration ,Chidambaram ,Arangamathevi ,Chethiyathoppu ,Dinakaran ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...