×

வளையமாதேவி கிராமத்தில் 4வது நாளாக என்எல்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம்

 

சேத்தியாத்தோப்பு, ஜூலை 31: வளையமாதேவி கிராமத்தில் 4வத நாளாக என்எல்சி சார்பில் வாய்க்கல் வெட்டும் பணி நடந்தது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணியை துவங்க முடிவு செய்து கத்தாழை, கரிவெட்டி, மும்முடிசோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2011ம் ஆண்டில் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு 6 லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்து வழங்கியது. கூடுதல் இழப்பீடு, குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை கேட்டு வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை துவக்கியது.

பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. என்எல்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வளையமாதேவி பகுதியில் கரிவெட்டி கிராமம் செல்லும் பாதை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பின்னர், அந்த சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நேற்று மீண்டும் துவங்கியது.

முதல்நாள் 35 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பகுதியினருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 300 மீட்டர் அளவுக்கு கால்வாய் வெட்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது.

The post வளையமாதேவி கிராமத்தில் 4வது நாளாக என்எல்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Brangamadevi ,NLC ,Chetiathoppu ,Arangamadevi ,Dinakaran ,
× RELATED நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில்...