×

இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் துவக்கி வைத்தார்

 

திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல்லில் இலவச கண் சிகிச்சை மற்றும் இதய பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் இதய நோய் சிகிச்சை முகாம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். சேசு சபை அதிபர் மரிவளன், புனித வளனார் பள்ளி தாளாளர் அருள்தாஸ், புனித வளனார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், மதர் தெரசா லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் சாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் மேயர் இளமதி முகாமை துவக்கி வைத்து பேசினார்.

கண் சிகிச்சை முகாமில், கண்ணின் புரை நோய், நீர் வடிதல், கண்ணில் அழுத்தம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய் பரிசோதனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்கோ, எலும்பு தேய்மானம் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மாத்திரை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. புனிதா வளனார் மருத்துவமனை நிர்வாகி புளோரா மெர்சி, ராமச்சந்திரன், செயலாளர்கள் சைலேந்திரராய், மணி பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Free Eye Treatment ,Camp ,Dintugul ,Thindugul ,Thindukal ,Free Eye Therapy ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே நல்லூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்