×

உயர் ரத்த அழுத்தம் கணக்கெடுக்கும் பணி

 

கடத்தூர், ஜூலை 31: கடத்தூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர் பேரூராட்சி விஸ்வநாதன் தெரு மற்றும் வன்னியர் தெருவில் உள்ள 18-69 வயதுக்குட்பட்டவர்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் பரவல் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டு விகிதம் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை மருத்துவ அலுவலர்கள் பொன்னி மற்றும் இளமதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வில், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், செவிலியர்கள் வினோதினி, சுசீலா மற்றும் சுகாதார களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

The post உயர் ரத்த அழுத்தம் கணக்கெடுக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Kadoor Municipal Viswanathan Street ,Kadoor Improved Primary Health Center ,Dinakaran ,
× RELATED சோளம் அறுவடை பணிகள் மும்முரம்