×

ஆடி மாத பிரதோஷம் தஞ்சாவூர் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர், ஜூலை 31: ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய கோயிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.

The post ஆடி மாத பிரதோஷம் தஞ்சாவூர் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Maha Nandi ,Aadi ,Thanjavur Peruvudayar Temple ,Mahanandiyam ,Lord ,Adi month Pradosham ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...