×

இந்திய மகளிர் அசத்தல்

பார்சிலோனா: ஸ்பெயின் ஹாக்கி சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஹாக்கிப் போட்டி பார்சிலோனாவில் டெர்ரஸ்சா நகரில் நடந்தது. அதன் மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி பங்கேற்றது. அதில் இங்கிலாந்து அணியை 1-1, ஸ்பெயினை 2-2 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் டிரா செய்தனர். தொடர்ந்து 2வது சுற்றில் இங்கிலாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் நேற்று ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதன் மூலம் தாங்கள் விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றியுடன் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் நாடு திரும்புகின்றனர். இந்திய ஆடவர் அணி ஹாக்கி தான் விளையாடி 4 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2டிராகளுடன் பட்டியலி்ல 2வது இடம் பிடித்தது. இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்தை வீழத்தியை தனது ஒரே வெற்றியை பதிவு செய்தது.

The post இந்திய மகளிர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Barcelona ,Spanish Hockey Association ,Terrassa ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...