×

ஆந்திராவில் ரூ.3 லட்சத்திற்கு சண்டை சேவல் விற்பனை: தாய்லாந்தை சேர்ந்தவர்கள் வாங்கினர்

திருமலை: ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம் லிங்கபாலம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தை சேர்நதவர் குரகுல ரத்தையா. இவர் கிராமத்தில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சேவல் இந்தாண்டு போகி பண்டிகை அன்று மேற்கு கோதாவரி மாவட்டம், கண்பவரத்தில் நடந்த சேவல் சண்டையில் பங்கேற்றது. இதில், ரூ.27 லட்சத்திற்கு பந்தயம் கட்டி விளையாடப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்று பந்தய பணம் பெறப்பட்டது.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த தாய்லாந்தை சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம்பெண்கள் அந்த சேவலை வாங்குவதற்காக ரங்காபுரத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அந்த சேவலை ரத்தய்யா விற்க மறுத்தார். இதையடுத்து, அந்த சேவலுடன் அவர்கள் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர், அவரிடம் இருந்த மற்றொரு பந்தய சேவலை ரூ.3 லட்சத்திற்கு வாங்கி கொண்டு சென்றனர்.

The post ஆந்திராவில் ரூ.3 லட்சத்திற்கு சண்டை சேவல் விற்பனை: தாய்லாந்தை சேர்ந்தவர்கள் வாங்கினர் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thailand ,Tirumala ,Kurakula Rathiya ,Rangapuram ,Lingapalam ,Eelur district, Andhra ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...