×

பிடி வாரண்ட் சர்ச்சை பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தவிர்த்த அதிபர் புடின்: காணொலி மூலம் பங்கேற்பதாக அறிவிப்பு

மாஸ்கோ: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடி வாரண்டை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா சென்றால் கைதாக கூடும் என்பதால் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரில் சர்வதேச விதிகளை மீறி உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது உள்ளிட்ட போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து புடினுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இந்தாண்டுக்கான பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அடுத்த மாதம் 22 முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிடி வாரண்ட் பிறப்பித்ததால், ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் வருவது சந்தேகமே என்று தென்னப்பிரிக்கா அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புடின், “ அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்கிறேன். தற்போதைய சூழலில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதை விட, ரஷ்யாவில் இருப்பது முக்கியமானது என்று நினைப்பதால் அதில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை,’’ என்று தெரிவித்தார்.கிரெம்ளின் மாளிகை கூறுகையில், `அதிபர் புடின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்பார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளது.

The post பிடி வாரண்ட் சர்ச்சை பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தவிர்த்த அதிபர் புடின்: காணொலி மூலம் பங்கேற்பதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,BRICS Summit ,Moscow ,International Criminal Court ,South Africa ,
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு