×

6ம் தேதி அமமுக பொதுக்குழு டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை:அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறு உள்ளது என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம், துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் வரும் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 6ம் தேதி அமமுக பொதுக்குழு டிடிவி.தினகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AAMUK General Committee ,TTV.Thinakaran ,Chennai ,General Secretary ,DTV ,Dinakaran ,AAM MUK ,
× RELATED பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிர்ச்சி...