×

என்எல்சி விவகாரம் அதிமுக போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

சேத்தியாத்தோப்பு: என்எல்சி விரிவாக்க பணியை கண்டித்து அதிமுக நடந்த இருந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராம பகுதியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்துக்கு விவசாயிகள் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதனை கண்டித்து விவசாயிகள், கிராம மக்கள் சார்பில் இன்று (31ம்தேதி) வளையமாதேவி கிராமத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, போராட்டத்துக்கு அனுமதி கேட்டு விவசாயிகளுடன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமாரை சந்தித்து உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.

அவர்களிடம் பேச்சு நடத்திய டிஎஸ்பி ரூபன்குமார் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தார்.இதேபோல், வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பி.ஆர்.பாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். விவசாயிகளை கேடயமாக வைத்து போராட்டம் நடத்தி சிலர் வன்முறையாக மாற்ற முயற்சிப்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post என்எல்சி விவகாரம் அதிமுக போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,NLC ,Chetiyathoppu ,Cuddalore District ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...