×

டோல்கேட்டை இடித்து தள்ளி கவிழ்ந்த லாரி ஊழியர் பலி

மதுரை: பிற்பகல் ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து அரிசி மூட்டைகளுடன் திருவனந்தபுரம் நோக்கி சென்ற லாரி, நேற்று மதுரை ரிங்ரோடு பகுதி வண்டியூரில் டோல்கேட்டுக்கு வந்தது. அப்போது லாரியின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து, டோல்கேட் மீது மோதி அங்கிருந்த வசூல் மையத்தின் மீது கவிழ்ந்தது. இதில், கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்த, மதுரை எல்கேடி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (25) விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

லாரியின் உதிரி பாகங்கள் பெயர்ந்து முன்னாள் சென்ற வாகனங்கள் மீதும் விழந்தது. இதில் இரண்டு கார், லாரி சேதமடைந்தன. லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் காயத்துடன் தப்பினர். விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக, டோல்கேட்டில் நின்ற வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டோல்கேட்டை இடித்து தள்ளி கவிழ்ந்த லாரி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Andhra Pradesh ,Kundur ,Thiruvananthapuram ,Madurai Ring Road ,
× RELATED மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது