×

அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிலம் அளித்தோருக்கு இழப்பீடு தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : அத்திக்கடவு-அவினாசி திட்டம் கடந்த ஆட்சி காலத்தில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை தற்போது அரசு மிகுந்த காலதாமதத்தோடு நிறைவேற்றி வருகிறது. மேலும் தமிழக அரசு இத்திட்டத்துக்கு நிலம் அளித்தவர்கள் மற்றும் குழாய் பதிக்க நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் அளிக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக பயிர் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்க வேண்டும். திட்டம் முழுமையாக நிறைவேற, உரியபணியை விரைந்து துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிலம் அளித்தோருக்கு இழப்பீடு தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,Chennai ,Tamil Nadu government ,Athikadavu-Avinasi ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...