×

ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்: வஞ்சிரம் விலை கிலோ ரூ.1,300, மீன்கள் விலை விண்ணை தொட்டது

சென்னை: ஆடி மாதத்தையொட்டி காசிமேட்டில் நேற்று மீன் வாங்க மக்கள் குவிந்தனர். விலையை பொருட்படுத்தாமல் தாங்கள் விரும்பிய மீன்களை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். வஞ்சிரம் கிலோ ரூ.1,300க்கு விற்கப்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி விற்பனை கூடத்தில் நேற்று மக்களின் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு முதல் ஏல முறையில் தொடங்கிய வியாபாரத்தில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை போட்டி போட்டு வாங்கினர். ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுவாக கூட்டம் அலைமோதும் நிலையில், நேற்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயில்கள், வீடுகளில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை முன்னிட்டு இரவில் சாமிக்கு படையல் போடுவர். அதற்காக பக்தர்கள் மீன், கருவாடுகளை வழக்கத்தைவிட அதிகளவு வாங்கிச் சென்றனர். இது குறித்து சில மீனவர்கள் கூறுகையில், ‘‘ஆடி மாதம் முடியும் வரை ஞாயிற்றுகிழமைகளில் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அதன் பிறகு வழக்கமாக மீன் வாங்க வருபவர்களின் கூட்டம் தான் இருக்கும்’’ என்றனர். நேற்று பெரிய மீன்களின் வரத்து குறைவாகவும், சிறிய மீன்களின் வரத்து அதிகமாகவும் இருந்தது. எனினும், மீன் மார்க்கெட்டில் அனைத்து வகை மீன்களும் விலை அதிகரித்தே காணப்பட்டது. எனினும், விலையை பொருட்படுத்தாமல் மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

மேலும், ஆட்டுக்கறி, கோழிக்கறி வாங்குவதற்கு கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மீனவர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘‘தற்போது ஆடி மாதம் நடக்கிறது என்பதால் பெரிய மீன்கள் கிடைக்கவில்லை என்பதற்காக திரும்பிச் செல்லாமல் சிறிய மீன்களை வாங்கிச் செல்கிறார்கள். அதனால் மீன்கள் விரைவில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன’’ என்றனர். நேற்று காசிமேட்டில் ஒருகிலோ வஞ்சிரம் ரூ.1,300, வவ்வால் (வெள்ளை நிறம்) ரூ.1,250, சங்கரா (பெரியது) ரூ.450, நண்டு ரூ.400, கடம்பா (பெரியது) ரூ.400, இறால் ரூ.450, நெத்திலி ரூ.250, ஷீலா ரூ.300, மத்தி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்: வஞ்சிரம் விலை கிலோ ரூ.1,300, மீன்கள் விலை விண்ணை தொட்டது appeared first on Dinakaran.

Tags : Kasimat ,Adi ,CHENNAI ,Adi month ,Adi: Vanjiram ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...