×

விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு மாலை, மரியாதை: போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

பூந்தமல்லி: மதுரவாயலில் நேற்று போக்குவரத்து மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை மதுரவாயல் போக்குவரத்து பிரிவு காவல்துறை மற்றும் தனியார் சேவை அமைப்பு இணைந்து நேற்று மதுரவாயலில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்களில் மாஸ்க் அணியாமல் வந்த பயணிகள், வாகன ஓட்டுநர்களுக்கு மாஸ்க் அணிவித்து, போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தாரை தப்பட்டை முழங்க, கொரோனாவில் இருந்து பாதுகாத்துகொள்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது சாலை விதிகளை முறையாகப் பின்பற்றியும், மாஸ்க் அணிந்தும் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய போக்குவரத்து போலீசார், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி, அவர்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறி ஒரே பைக்கில் 3 பேராக வந்த குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொதுமக்கள் சாலை விதிகளை மதிப்பதுடன், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்….

The post விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு மாலை, மரியாதை: போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Maduravala ,
× RELATED பூந்தமல்லியில் பரபரப்பு இந்து...