×

புலவர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: புலவர் மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலவர் மா.நன்னன் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக விளங்கியவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பெரியார், கலைஞர், மா.நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக மொழிக்காக பாடுபட்டவர்கள் என புலவர் மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் உரையாற்றினார்.

மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; “பேராசிரியர் நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமையாக நான் கருதுகிறேன். நீதிக்கட்சியினுடைய அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய வெள்ளுடை வேந்தர் தியாகராயருடைய பெயரில் அமைந்துள்ள இந்த தியாகராய நகரில், இந்த சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

திராவிடர் கழகத்தின் தலைவரான மானமிகு ஆசிரியர் இந்த மேடையில் இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக நானும் பங்கெடுத்திருக்கிறேன். நீதிக்கட்சியில் நுழைந்து. திராவிடர் கழகத்தில் செயல்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர் நன்னன் என்பதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி பொருத்தமாக அமைந்திருக்கிறது.

பேராசிரியர் நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை,
* புத்தக வெளியீட்டு விழா
* மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவற்றோடு இணைத்து ஏற்பாடு செய்துள்ள நன்னன் குடி அமைப்புக்கு என்னுடைய வாழ்த்துகளை, நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு “அகமும் புறமும்” என்று தலைப்பு வைத்து முன்பு வெளியிட்டேன்.
புலவர் நன்னன் அவர்கள் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக நேர்மையானவராக விளங்கியவர். அத்தகைய பெருமகனாருக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார், தலைவர் கலைஞரை போல புலவர் நன்னனும் ஆண்டுகளை கடந்து வாழ்ந்தவர். இனப்பற்றும் 90 மொழிப்பற்றும் இருந்த காரணத்தால்தான் இத்தனை பாடுபடுவதற்காக வாழ்நாளை நீட்டித்து வைக்கிறது. ஆண்டுகள்

வாழ்நாளெல்லாம் நாட்டுக்காக மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமானது அது எல்லோராலும் முடியாது தந்தை பெரியாரைப் போல, கலைஞரைப் போல, நன்னனைப் போல ஒரு சிலரால் தான் முடியும். இறுதி வரைக்கும் உழைத்தவர்கள் இவர்கள். இவர்களால் சும்மா இருக்கமுடியாது. இவர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களையும் சும்மா விடமாட்டார்கள்

நன்னன் அவர்கள் எழுதிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு என்ன பெருமை என்று சொன்னால், பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கக்கூடிய புலவர் நன்னன் அவர்களது விரலுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன்.

அவரை பொறுத்தவரைக்கும் என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வதுண்டு. அப்படி தொடர்பு கொள்கிறபோதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன் உங்கள் பேச்சை படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. அதைதாண்டி, எனக்கு அறிவுரையும் பல நேரங்களில் அவர் சொல்லியிருக்கிறார்.

திடீரென்று ஒரு வாரம் அவரிடத்திலிருந்து எனக்கு ஃபோன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன் உடல் நிலை சரியில்லை போலிருக்கிறது என்று கருதி உடனே அவரை நேரடியாக சென்று பார்த்து விசாரித்தேன் ஆமாம் என்று சொன்னார்கள்.

அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அப்போதும் எனக்கு உற்சாகத்தை வழங்கினார். அப்போது அந்த நேரத்தில் முரசொலி பொங்கல் மலர் வெளியீடு நடந்தது. அந்த மலரை கொண்டு சென்று அவரிடத்தில் கொடுத்தேன். அவர் திருப்பி எனக்கு பெரியார் கணினி புத்தகத்தை கொடுத்தார்.

திடீரென்று ஒருநாள் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அறிவாலயத்திற்கு வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போகவேண்டும், உற்சாகப்படுத்தி விட்டுப் போகவேண்டும் என்பதற்காகதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.

நவம்பர் மாதம் 7ம் நாள் நன்னன் அவர்கள் மறைந்தார்கள். மறைந்தார் என்று சொல்ல முடியாது அவர் மறைந்த பிறகும், புத்தகங்கள் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் அவர்கள் வாழ்கிறார். தொடர்ந்து அவர் வாழ்வார்.

ஒன்றல்ல இரண்டல்ல, 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார் நன்னன் அவர்கள். இந்த நூல்களை நன்னன் குடி அமைப்பு வெளியிட்டுள்ளது. நன்னன் குடி என்றால் குடும்பத்தினர் மட்டுமல்ல, நாம் அனைவரும் நன்னன் சேர்ந்தவர்கள் தான். அவரது குடியைச் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு நடந்தால் செயற்குழு நடந்தால் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்திருப்பார்” என முதல்வர் உரையாற்றினார்.

The post புலவர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nannan ,Chief Minister ,Muhammadi G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,BD ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...