×

கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம்: பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் நடந்தது

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம் பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடைபயிற்சி சென்றிருந்தபோது கீழே விழுந்து சிறிய காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ளார்.

அதனால் இன்று போரூரில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தளபதி எஸ்.பாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆர்.பூங்கொடி, என். பிரபாகரன், காஞ்சி ஆனந்தன், ஆறுமுகம், போரூர் பிரான்சிஸ், குருமூர்த்தி, மணிகண்டன், காரம்பாக்கம் சுந்தர், லோகேஷ் பாண்டியன், லாவண்யா மற்றும் 100க்கும் மேற்பட்ட மகளிர் மகளிர் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம்: பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,General Secretary ,Thalapathy Bhaskar ,Chennai ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...