- முதல்வர் G.K ஸ்டாலின் ட்விட்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழின் தலைமைக் குடியரசுத் தலைவர்
- தமிழ்நாடு
- கெ ஸ்டாலின்
- முதல்வர் G.K ஸ்டாலின் டெவிட்
சென்னை: தோழி விடுதிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தோழி விடுதிகள்- இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: தோழி விடுதிகள் – இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி.
மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது. டாக்டர் நடேசனாரின் ‘திராவிடர் இல்லம்’ போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
The post ‘தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி’: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட் appeared first on Dinakaran.