×

தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள உத்தரவு அறிக்கையில், 4 பேர் எஸ்.பிக்களாக பதவி உயர்வு பெற்றதுடன், பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏ.எஸ்.பியாக இருந்த ரவிச்சந்திரன், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி ஏ.எஸ்.பியாக இருந்த ரமேஷ் பாபு, சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அரியலூர் ஏ.எஸ்.பி மலைசாமி, சொத்து உரிமை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியாக இருந்த ஏ.சி.செல்லபாண்டியன், ஆவடி 5வது பட்டாலியன் சிறப்பு காவல் படை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu police ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu police ,
× RELATED தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு...