×

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

டெல்லி: 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது. அவரது வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிளான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் வாக்களர்களுக்கு பணபட்டுவாடா செய்யபட்டதாகவும், வேட்பு மனுவில், சொத்து, கடன் மற்றும் வருமானம் உள்ளிட்டவற்றை ரவீந்திரநாத் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டபட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேட்பு மனுவில் சொத்து, கடன் மற்றும் வருமானம் குறித்த விவரங்கள் தெரிவிக்கபடவில்லை என்றும், குறையுற்ற வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுகொண்டது தவறு என கூறி ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என கடந்த 6-ம் தேதி தீர்பளித்தது. மேலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை ரத்து செய்யவும், மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்கும் வரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகால தடை விதிக்க கோரியும் ஓ.பி.ரவீந்திரநாத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

The post தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.! appeared first on Dinakaran.

Tags : GP ,Rabindranath ,Supreme Court ,ICOART ,Delhi ,Dheni ,Rabindra Nath ,Chennai High Court ,ICORT ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...