×

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகேந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய,
மாநில அரசுகள் பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Virudhunagar ,Manipur ,City Congress Committee ,President ,Nagendran ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.....