×

ராமேஸ்வரம் கோயில் ஆடி திருவிழாவில் கெந்தமாதன பர்வதத்திற்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாள்

ராமேஸ்வரம், ஜூலை 30: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ேநற்று காலை சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிக லிங்க பூஜை, பின் காலபூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.

இதையொட்டி ரத வீதிகள் உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா சென்று அருள்பாலித்தனர். கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் பகல் முழுவதும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கெந்தமாதன பர்வதம் சென்று சுவாமி-அம்பாளை தரிசித்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் முழுவதும் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டது.

The post ராமேஸ்வரம் கோயில் ஆடி திருவிழாவில் கெந்தமாதன பர்வதத்திற்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாள் appeared first on Dinakaran.

Tags : Swami ,Ambal ,Kentamadhana Parvatam ,Rameswaram temple Aadi festival ,Rameswaram ,Kentamadhana Parvatham ,Rameswaram Ramanathaswamy Temple Adi Thirukalyana Festival ,Swami Ambal ,Kentamadana Parvatam ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா