×

சிங்கமுக காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

வேதாரண்யம், ஜூலை 30: வேதாரண்யம் தாலுகா துளசியாபட்டினம் சிங்கமுக காளியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் முடி இறக்கியும் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்பு மாலை கணபதி ஹோமமும் நடைபெற்று உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பெண்களுக்கு மாங்கல்ய பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post சிங்கமுக காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku Pooja ,Singamuga Kaliamman Temple ,Tulsiapatnam ,Singamuga Kaliamman temple Aadi festival ,Singamuka Kaliamman Temple ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை