×

13 விஏஓக்கள் பணி இடமாற்றம் ஆர்டிஓ உத்தரவு அணைக்கட்டு தாலுகாவில்

அணைக்கட்டு, ஜூலை 30: அணைக்கட்டு தாலுகாவில் 13 விஏஓக்கள் பணி இட மாற்றம் செய்து ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் ஓராண்டும், ஒரே கிராமத்தில் 3 ஆண்டுகளும் பணியாற்றி வந்த 13 விஏஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பீஞ்சமந்தை விஏஓவாக இருந்த குணராஜ் அணைக்கட்டு கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய தமிழழகன் திப்பசமுத்திரத்திற்கும், கீழ்கிருஷ்ணாபுரத்தில் பணியாற்றிய நந்திவர்மன் வெட்டுவானத்திற்கும், அங்கு பணியாற்றிய தங்கமுத்து பூதூருக்கும், அங்கு பணியாற்றிய தமிழரசு கீழாச்சூருக்கும், அங்கு பணியாற்றிய கார்த்திக் செதுவாலைக்கும், அங்கு பணியாற்றிய அன்பு மேலரசம்பட்டிற்கும்.

அங்கு பணியாற்றிய குமரேசன் சின்னபள்ளிகுப்பம் கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய அபிலாஸ் ஒடுக்கத்தூருக்கும், அங்கு பணியாற்றிய சிவமூர்த்தி கருங்காலி கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய கிருஷ்ணவேணி கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், பொய்கையில் பணியாற்றிய முனிரத்தினம் பள்ளிகொண்டாவிற்கும், அங்கு பணியாற்றிய ஞானசுந்தரி பொய்கை கிராமத்திற்கும் என மொத்தமாக 13 விஏஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒடுக்கத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அபிலாஸ் கூடுதல் பொறுப்பாக பீஞ்சமந்தை மலை கிராமமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 13 விஏஓக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விஏஓ வாக பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை கவனிக்க வேண்டும் என வேலூர் ஆர்டிஓ கவிதா உத்தரவிட்டுள்ளார்.

The post 13 விஏஓக்கள் பணி இடமாற்றம் ஆர்டிஓ உத்தரவு அணைக்கட்டு தாலுகாவில் appeared first on Dinakaran.

Tags : RTO ,Damkattu taluk ,Damkatu ,Damkatu taluk ,Vellore district ,Damaktu taluk ,Dinakaran ,
× RELATED திருப்பூர் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் இட நெருக்கடியால் பொதுமக்கள் அவதி