×

பிரபல ரவுடி வசூர் ராஜா ேகாவை சிறைக்கு மாற்றம் ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான

வேலூர், ஜூலை 30: ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி வசூர் ராஜா கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். வேலூர் புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி ராஜா என்ற வசூர் ராஜா(40). இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மதுரை கப்பலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ₹50 கட்டணம் செலுத்த மறுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் பாஷாவை போனில் தொடர்பு கொண்டு, தனக்கு ₹3 லட்சம் தராவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் கடந்த 27ம் தேதி பெயிண்ட் கடை உரிமையாளர் பாஷா, அவரது கடையில் வேலை செய்யும் சலீம் ஆகியோரை வழிமறித்த வசூர்ராஜா மற்றும் அவரது நண்பரான காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன்(35) ஆகியோர் கத்தியை காட்டி ₹5 லட்சம் ேகட்டு மிரட்டி, ₹20 ஆயிரம் பறித்துள்ளனர். தொடர்ந்து மறுநாள்(நேற்று முன்தினம்) வருவதாகவும் மீதி பணத்தை தரும்படி கூறி மிரட்டி சென்றுள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வசூர் ராஜா, வெங்கடேசனை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வேலூர் சிறையில் இருந்து வசூர்ராஜாவை நேற்று முன்தினம் இரவு நிர்வாக காரணங்களுக்காக கோவை சிறைக்கு போலீசார் கொண்டு சென்று அடைத்தனர்.

The post பிரபல ரவுடி வசூர் ராஜா ேகாவை சிறைக்கு மாற்றம் ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான appeared first on Dinakaran.

Tags : Vasoor ,Raja Yeka ,Vellore ,Raja Eka ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர்...