×

குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆடி கொடை விழா நாளை துவக்கம்

உடன்குடி, ஜூலை 30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கொடை விழா வெகு விமர்சையாக நடந்துவருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா நாளை (31ம் தேதி) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் துவங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது. ஆக. 1ம் தேதி காலை 7மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு கும்பம் வீதியுலா, காலை 11.15 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணி, இரவு 7மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

இரவு 8மணிக்கு வில்லிசை, இரவு 9மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் வீதியுலா நடைபெறும். ஆக. 2ம்தேதி காலை 10 மணிக்கு அன்னதானம், காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் வீதியுலா, காலை 11.30 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர், கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆடி கொடை விழா நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Aadi Kodai ceremony ,Kulasai Mutharamman ,Ebengudi ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Kulasai Mutharamman temple ,
× RELATED மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு...