×

மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காயம்

பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் பொகாரோ மாவட்டத்தில் கேட்கோ என்ற கிராமம் உள்ளது. நேற்று மொகரம் பண்டிகையையொட்டி இங்குள்ள இமாம் ஹுசைனின் கல்லறையில் இருந்து ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இரும்புக் கம்பிகளில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று காலை 6 மணியளவில் ஊர்வலம் சென்றபோது, உயர் மின்அழுத்தம் கொண்ட மின்கம்பியில் இரும்புக் கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது. இதில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் பொகாரோ அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

* குஜராத்தில் 2 பேர் பலி
குஜராத் மாநிலம் ராஜ்காட் மாவட்டம் ரசூல்பாரா பகுதியில் நடந்த மொகரம் ஊர்வலத்திலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தார்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Mogaram ,procession ,Bokaro ,Mogaram procession ,Jharkhand ,Dinakaran ,
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்