×

ஹாஸ்டல் அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி: ஏஏஆர் விளக்கம்

புதுடெல்லி: மாணவர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு 12 சதவீத ஏஏஆர் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் நொய்டாவைச் சேர்ந்த இரு தங்கும் விடுதி நிறுவனங்கள், விடுதி அறைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு கோருவது தொடர்பாக ஜிஎஸ்டி தீர்ப்பாயமான அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமர்வில் மனு செய்திருந்தன. இந்த மனுக்கள் மீது ஏஏஆர் அளித்த தீர்ப்பில், ‘‘கடந்த 2022 ஜூலை 17ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஒருநாளுக்கு ரூ.1000க்கு குறைவான கட்டணம் கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும். குடியிருப்பு வசிப்பிடங்களுக்கு மட்டுமே இந்த 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்கும் விடுதிகள், பிஜிக்கள் குடியிருப்பு வசிப்பிடங்கள் என வகைப்படுத்த முடியாது. ஒரு தங்குமிடத்தில் தனிப்பட்ட சமையலறை வசதி இல்லாமல் ஒரே அறையை சிலர் பகிர்ந்து கொண்டால், அது குடியிருப்பு வசிப்பிடம் என்ற வரம்புக்குள் வராது. அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பேச்சுலர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது உறுதியாகி உள்ளது.

The post ஹாஸ்டல் அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி: ஏஏஆர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : AAR ,New Delhi ,Bengaluru ,Noida… ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு