×

ஆஸ்திரேலியாவுடன் 5வது டெஸ்ட் இங்கிலாந்து வலுவான முன்னிலை: கிராவ்லி, ரூட் அபார ஆட்டம்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வலுவான முன்னிலை பெற்றது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா 295 ரன் குவித்து ஆட்டமிழந்தது. 12 ரன் பின்தங்கிய நிலையில் 3ம் நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தேநீர் இடைவேளையின்போது 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்திருந்தது.

பென் டக்கெட் 42 ரன், ஜாக் கிராவ்லி 73 ரன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 42 ரன், ஹாரி புரூக் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஜோ ரூட் 61 ரன், ஜானி பேர்ஸ்டோ 34 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், மர்பி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க இங்கிலாந்து 253 ரன் முன்னிலை பெற்றிருந்ததால், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ளதால், ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.

The post ஆஸ்திரேலியாவுடன் 5வது டெஸ்ட் இங்கிலாந்து வலுவான முன்னிலை: கிராவ்லி, ரூட் அபார ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Australia ,England ,Crawley ,Root ,London ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...