×

இரண்டாவது ஒருநாள் போட்டி: ரன் குவிக்க இந்தியா திணறல்; மழையால் ஆட்டம் பாதிப்பு

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 24.1 ஓவரில் 113 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்சர் படேல் இடம் பெற்றனர். ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்றார். இஷான் கிஷன், ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.4 ஓவரில் 90 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

இஷான் அரை சதம் அடித்தார். கில் 34 ரன் (49 பந்து, 5 பவுண்டரி), இஷான் 55 ரன் (55 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அக்சர் படேல் 1 ரன், ஹர்திக் பாண்டியா 7 ரன், சஞ்சு சாம்சன் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 24.1 ஓவரில் 113 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்திய அணி 23 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சூரியகுமார் யாதவ் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாத நிலையில், ரவீந்திர ஜடேஜா அவருடன் இணைந்து ஆட்டத்தை தொடர காத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்டு 2, யானிக் காரியா, குடகேஷ் மோட்டி, ஜேடன் சீல்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post இரண்டாவது ஒருநாள் போட்டி: ரன் குவிக்க இந்தியா திணறல்; மழையால் ஆட்டம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Barbados ,West ,Indies ,Dinakaran ,
× RELATED ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை