×

ஆகஸ்ட் 25, 26க்கு பதில் இந்தியா கூட்டணி கட்சிகள் செப்டம்பரில் ஆலோசனை: மூத்த தலைவர் தகவல்

புதுடெல்லி: இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. ஒன்றிய பாஜ அரசை வீழ்ந்த திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 15 கட்சிகளின் கூட்டணி 26 கட்சியாக வலுப்பெற்றது. இந்த 26 கட்சிகள் கலந்து கொண்ட 2வது கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

அப்போது இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் சூட்டப்பட்டது. 2வது கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து 26 கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் ஆகஸ்ட் 25,26 தேதிகளில் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆகஸ்ட் 25, 26க்கு பதில் இந்தியா கூட்டணி கட்சிகள் செப்டம்பரில் ஆலோசனை: மூத்த தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Allies ,New Delhi ,India Alliance ,Union BJP government… ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்