×

பன்றிகளை கடத்திய வழக்கு பாஜ நகர செயலாளர் கைது: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் கன்னிமார் கோவில் பிரிவு அருகே வசிப்பவர் தினேஷ் குமார். இவர், பன்றி பண்ணை அமைத்து அதில் 50க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்தார். கடந்த 1ம்தேதி இவரது பண்ணையில் இருந்த பன்றிகளில் 30 பன்றிகளை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து தினேஷ் குமார் மூலனூர் போலீசில் புகார் அளித்தார். தனிப்படையினர் மூலனூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில், பன்றிகளை ஒரு கும்பல் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்களுக்குள் நடந்த செல்போன் உரையாடல் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பன்றிகளை கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டம் பழநி பழைய தாராபுரம் ரோட்டை சேர்ந்த பாஜ நகரச் செயலாளர் அருண்குமார் (32), அவரது கூட்டாளிகள் தவசியப்பன் (28), விஜயகுமார் (33), ரமேஷ் குட்டி (27), ராசுகுட்டி (24), மற்றும் மணிகண்டன் (24) ஆகிய ஆறு பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 30 பன்றிகளும் மீட்கப்பட்டன. நீதிபதி உத்தரவின்படி தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post பன்றிகளை கடத்திய வழக்கு பாஜ நகர செயலாளர் கைது: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Baja ,Tarapuram ,Dinesh Kumar ,Moolanoor Kannimar temple ,Tirupur district ,Dinakaran ,
× RELATED காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்