×

வரும் 14ம் தேதி முதல் சென்னை-நெல்லை ரயில்களின் நேரம் மாற்றம்

நெல்லை: நெல்லை தொடங்கி மதுரை வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நிறைவுற்ற நிலையில், தற்போது ரயில்கள் வேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கால அட்டவணையில் மாற்றம் இல்லாததால், ரயில்கள் சில ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை வழியாக செல்லும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண்: 12690 நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை சென்ட்ரல் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலானது, இரவு 9:25 மணிக்கு நெல்லைக்கு வந்தடைந்து 9:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஆனால் அடுத்த மாதம் முதல் இந்த ரயில் ஆனது 20 நிமிடங்கள் தாமதமாக நெல்லைக்கு இரவு 9:45 மணிக்கு வந்தடைந்து 9:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

வண்டி எண்: 16127 – சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது, நெல்லைக்கு இரவு 7:35 மணிக்கு வந்து சேர்ந்து 7:40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இனி ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8:35 மணிக்கு வந்து, மீண்டும் 8:40 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு செல்லும். இதுகுறித்து பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘இரட்டை ரயில்பாதை பணிகள் முடிந்த பின்னர் பல ரயில்கள் மதுரைக்கு முன்னரே வந்து ரயில் நிலையங்களில் தேவையின்றி காத்து கிடக்கின்றன. எனவே புதிய கால அட்டவணைப்படி ரயில் நிலையங்களில் இருந்து பல ரயில்கள் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. எனவே பயண நேரம் மிச்சப்படும்’’ என்றார்.

The post வரும் 14ம் தேதி முதல் சென்னை-நெல்லை ரயில்களின் நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nedal ,Madurai ,Nedelly ,
× RELATED சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும்...