×

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ நிறுவனம், எக்ஸ் 5 பேஸ்லிப்ட் மாடலை ஆல்வீல் டிரைவ் எஸ்யுவியாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் தலா 2 வீதம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ் டிரைவ் 40ஐ எக்ஸ் லைன், 40ஐ எம் ஸ்போர்ட், எக்ஸ்டிரைவ் 30 டி எக்ஸ் லைன், எம் ஸ்போர்ட் என 4 வேரியண்ட்கள் உள்ளன. சென்னையில் உள்ள பிஎம்டபிம்யூ ஆலையில் இந்தக் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இவற்றில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 381 எச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 5.4 நொடிகளில் எட்டும். இதுபோல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 286 எச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டும். மேற்கண்ட இரண்டு இன்ஜின்களிலும் 12 எச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 48வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது.

இந்த காரில் எலக்ட்ரானிக் கட்டுப்பாடு கொண்ட லாக், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இரண்டு ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன், 4 மண்டல தானியங்கி கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூப், குரூஸ் கண்ட்ரோல், ரிமோட் பார்க்கிங் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கம்போர்ட், எஃபீஷியண்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் என 4 டிரைவிங் மோட்கள் உள்ளன.

The post பிஎம்டபிள்யூ எக்ஸ்5 appeared first on Dinakaran.

Tags : BMW ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...