×

இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா ஆயத்தம்: தோல்வியில் இருந்து மீளுமா வெ.இண்டீஸ்?

பிரிட்ஜ்டவுன்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்துவருகிறது. இதில் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று அதே மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவின் பவுலிங் அற்புதமாக இருந்தது. குறிப்பாக குல்தீப்யாதவ் 4, ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆனால் பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. 115 ரன் இலக்கை சேசிங் செய்வதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. குறைந்த இலக்கு என்பதால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில்
இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இன்றும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.

மறுபுறம் வெஸ்ட்இண்டீஸ் பரிதாபமான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் முதல் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப்பை தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்த வேண்டுமெனில் பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஆலிக் அதானேஸ், ஹெட்மயர், ரோமன் பவெல் ஆகியோர் ரன் குவிக்க வேண்டியது கட்டாயம். இந்தியாவுக்கு எதிராக அந்த அணி தொடர்ச்சியாக 9 ஒரு நாள் போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. இன்று தோல்வி பாதையில் இருந்து திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் இன்று 141வது முறையாக மோத உள்ளன. இதுவரை மோதிய 140 போட்டியில் இந்தியா 71, வெ.இண்டீஸ் 63ல் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டி கைவிடப்பட்டுள்ளது.

The post இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா ஆயத்தம்: தோல்வியில் இருந்து மீளுமா வெ.இண்டீஸ்? appeared first on Dinakaran.

Tags : India ,W. ,Indies ,Bridgetown ,West Indies ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...